359 வெவ்வி ராதனை மேவரும் தீவினை வவ்வி மாற்றரும் சாபமும் மாற்றிய அவ்இராமனை உன்னித் தன்ஆருயிர் செவ்விரா துணர் வோய்ந்துடல் தேம்புவாள் நலந் துடிக்கின்றதோ நான்செய்தீவினைச் சுலந் துடித்தின்னமும் தருவதுண்மையோ பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல் வலந்துடிக்கின்றில வருவதோர்கிலேன் முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள் துனிஅறு புருவமும் தோளும் நாட்டமும் இனியன துடித்தன ஈண்டும் ஆண்டென நனிதுடிக் கின்றன ஆய்ந்து நல்குவாய் மறந்தனென் இதுவுமோர் மாற்றங் கேட்டியால் அறந்தரு சிந்தைஎன் ஆவிநாயகன் பிறந்தபார் முழுவதும் தம்பி யேபெறத் துறந்து கான்புகுந்தநாள் வலந்துடித்ததே நஞ்சனையான் வனத்து இழைக்க நண்ணிய வஞ்சனைநாள் வலம்துடித்த வாய்மையால் எஞ்சல ஈண்டுதாம் இடந் துடிக்குமால் அஞ்சல் என்றிரங்குதற்கு அடுப்பதுயா தென்றாள் (காட்சிப்படலம் 9, 12, 29, 32-35) சீதாதேவிக்குத் திரிசடைகனா நிலையுரைத்தல் கொச்சகம்-1 - தரு-6 துயில் இலையாதலின் கனவு தோன்றல் அயில்விழி ஒருகனவு அமைய நோக்கினேன் பயில்வன பழுதில பரிவின் ஆண்டன வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால் எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறிலாத் திண்ணெடுங் கமுதை பேய்பூண்ட தேரின்மேல் அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன் நண்ணினன் தென்புலம் நவையில் கற்பினாய் |