பக்கம் எண் :

389

 
தணிப்பரும் பெரும்படைக்கலம் தழல்உமிழ் தறுகண்
பணிக்குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றித்
துணிக்கஉற்று உயர்கலுழனும் துணுக்குறச் சுற்றிப்
பிணித்தது அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க

திண்ணென் யாக்கையைத் திசைமுகன்படை சென்றுதிருக
அண்ணல்மாருதி அன்றுதன் பின்சென்ற அறத்தின்
கண்ணின் நீரொடும் கனகதோரணித் தொடும்கடைநாள்
தண்ணென் மாமதி கோளொடும் சாய்ந்தெனச் சாய்ந்தான்

குரக்குநல்வலம் குறைந்தது என்றுஆவலம் கொட்டி
இரைக்கும் மாநகர் எறிகடல் ஒத்தது எம்மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகிஒத்தது தேவர்
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமான்

வந்திரைத்தனர் மைந்தரும் மகளிரும் மழைபோல்
அந்தரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார்
முந்திஉற்ற பேர்உவகைக்கு ஓர்கரையிலை மொழியின்
இந்திரன் பிணிப்புண்டநாள் ஒத்தது அவ்இலங்கை
                              (பாசப்படலம் 54, 56, 57, 60, 62)

எய்யுமின் ஈருமின் எறிமின் போழுமின்
கொய்யுமின் குடரினைக்கூறு கூறுகள்
செய்யுமின் மண்ணிடைத் தேய்மின் தின்னுமின்
உய்யுமேல் இல்லைநம் உயிர்என்று ஓடுவார்

நச்சடை படைகளால் நலியும் ஈட்டதோ
வச்சிரஉடல் மறிகடலின் வாய்மடுத்து
உச்சியின் அழுத்துமின் உருத்ததன்றெனின்
குச்சிடை இடுமெனக் கிளக்கின்றார் சிலர்

ஓங்கலம் பெருவலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினால்இனி
ஏங்கலம் இவன்சிரத்து இருந்தலால்திரு
வாங்கலம் என்றழும் மாதரார்பலர்

திண்டிறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான்
தண்டலில் தன்னுருக் கரந்ததன் மையான்