பக்கம் எண் :

390

 
மண்டமர் தொடங்கினன் வானரத்துஉருக்
கொண்டனன் அந்தகன்கொல் என்றார்பலர்

கயிலையின் ஒருதனிக் கணிச்சி வானவன்
மயிலியல் சீதையின் கற்பின் மாட்சியால்
எயிலுடைத் திருநகர் சீதைப்ப எய்தினன்
அயிலெயிற் றொருகுரங்காய் என்பார்பலர்
                            (பிணிவீட்டுபடலம் 1, 3, 5, 13, 15) 

இராவணன் கொலுவீற்றிருத்தல்

விருத்தம்-23 - தரு-18 


தலங்கள் மூன்றிற்கும் பிறிதொருமதி தழைத்தென்ன
அலங்கல் வெண்குடைத் தண்ணிழல் அவிர்ஒளிபரப்ப
வலங்கொள் தோளினான் மண்ணின்றும் வானுறஎடுத்த
பொலங்கொள் மாமணி வெள்ளியங் குன்றெனப்பொலிய

மரகதக் கொழுங்கதிரொடு மாணிக்க நெடுவாள்
நரகதேயத்துள் நடுக்குரு இருளையும் நக்க
சிரம்அனைத்தையும் திசைதொறும் திசைத்தொறும் செலுத்தி
உரகர்கோன் இனிதரசு வீற்றிருந்தனன்ஒப்ப

ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னை
நாகர்வாழ் இடம்முதல்என நான்முகன் வைகும்
மாகமால் விசும்பீறு எனநடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோற்றினர் சுற்ற

மாறளாவிய மகரந்த நறவுண்டு மகளிர்
வீறளாவிய முகிழ்முலை மெழுகிய சாந்தின்
சேறளாவிய சிறுநறுஞ் சீகரத் தென்றல்
ஊறளாவிய கடுவென உடலிடை நுழைய

திங்கள் வாணுதல் மடந்தையர் சேயரிகிடந்து
அங்கயத் தடந்தாமரைக்கு அலரியோன்ஆகி
வெங்கண் வானவர்தானவர் என்றிவர் விரியாப்
பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று