பக்கம் எண் :

391

 
இருந்த எண்டிசைக்கிழவனை மாருதி எதிர்ந்தான்
கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி
உருந்துநஞ்சு போல்பவன் வயின்பாய்வென் என்றுடன்றான்
                                 (பிணிவீட்டுபடலம் 44, 48, 49, 50) 

அனுமாரை ராவணன் வினாவுதல்

விருத்தம்-24 - தரு-19 


நோக்கிய கண்களால் நொறில் கனற்பொறி
தூக்கிய அனுமன்மெய்ம் மயிர் சுறுக்கொள
தாக்கிய நகையொடும் தவழ்ந்த வெம்புகை
வீக்கிய அவனுடல் விசித்த பாம்பினே

அன்ன ஓர்வெகுளியன் அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற
என்இவண் வரவுநீ யாரை என்றவன்
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான்

நேமியோ குலிசியோ நெடுங்கணிச்சியோ
தாமரைக் கிழவனோ தறுகண் பல்தலைப்
பூமிதாங் கொருவனோ பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்
                            (பிணிவீட்டுபடலம் 63-68)

அனுமார் இராவணனுக்கு விடையும் மதியும் கூறல்

விருத்தம்-25 - தரு-20 


சொல்லிய அனைவரும் அல்லன் சொன்னஅப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்
அல்லியங் கமலமே அனைய செங்கண்ஓர்
வில்லிதன் தூதன்யான் இலங்கை மேயினேன்

அனையவன் யாரென அறிதியாதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும்