பக்கம் எண் :

41

பூதந் தந்தபர மானந்தத்தை நாலாகப்
        பொன்னின் கமலத்திலே          எடுத்தான்-அதில்
   சோதி கோசலைக்கொன்று கைகேசிக்கொன்றும்
        சுமித்திரைக் கிரண்டுமாக்    கொடுத்தான்-மூத்த
   பேதை கோசலை இடந்திந்த ராகவன்
        பிறந்தான் என்கவலையை    விடுத்தான்-இவனை (ஆரெ) 

2. தலையாம் பரதன் லட்சுமணன் சத்துருக்கன்
          தம்பியர் இவனுக்கு         நேயம்-மிகக்
      கொலையாளன் சுவாகுவையும் சேனையையும் இவனம்பு
         கொண்டுபோனதென்ன      மாயம்-நான்
      உலையா தென்வேள்வியை முடித்தானே இவனம்பால்
         உருண்டதே தாடகை       காயம்-மெத்த
      மலைபோலே வந்ததும் பனிபோலே போச்சிந்த
         மகராசன் செய்தச்          காயம்-இவனை(ஆரெ) 

3. துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
          துடைத்தானே அவள் உடல் மாசை-சொல்லும்
      பெருக்கம் என்ன இவன் பிறக்கவே உலகெங்கும்
          பிறந்ததே மங்கல          ஓசை-உங்கள்
      பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
          பார்க்கவேணும் இன்னோர்   ஆசை-இங்கே
       வரச் சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலிவிலே
          வந்தானே நீங்கள் செய்த    பூசை-இவனை(ஆரெ)

------

ஸ்ரீராமர் வில்வளைத்தல்

விருத்தம்-15 

புங்கவனாம் முனிவனிந்த வாறு சொல்லப்
        போர்வில்லை அறுபதினா யிரம் பேராலே
   அங்குவரும் படிசெய்தான் இதைநாண் ஏற்ற
        ஆகுமென்றால் மருமகளே ஆகும் என்றான்
   சிங்கமெனும் சனகனுடன் விண்ணும் மண்ணும்
        திடுக்கிடவே எல்லோரும் ராமன் கையால்