40 சரணங்கள் 1. பண்ணிப் பதித்தாற் போல் இரு ஸ்தனமும்-கூட பாங்கியர்கள் இன்ன முந்துரைத் தனமும் எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப் பெண்ணைப் போல் கண்ணிற் காணும் மங்கையர்(ஆரோ 2. பாக்கியம் என்ப திவர்தெரி சனமே-அதிங்கே பலித்ததென்ன புண்ணியமோ மனமே மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் பெண்கள் பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ கண்கள் (ஆரோ) 3. சந்திர விம்பமுக மலராலே-என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார் இந்த நாளில் வந்து சேவை தகுகிறார் (ஆரோ) கௌசிகர் ஸ்ரீராமர் வரலாறு சொல்லுதல் விருத்தம்-14 மனதில் இந்தப் படிநினைந்து மறுநாள் எழுந்து மகஞ்செய்யும் கனக மணிமண் டபத்தினிற்போய் காகுத்தனும் தம்பியு மிருந்தார் அனைய காலத் திவர்பெருமை அருமை தெரிய உரையு மென்றே சனகன் உரைப்பக் கௌசிகன்உத் தரிப்பான் விவரம் விரிப்பானே. தரு-13 சங்கராபரண ராகம் ஆதிதாளம் பல்லவி ஆரென் றெண்ணாமலே - நாளுமிவன் அதிசயங்களைச் சொல்லக் கேளும் (ஆரெ) அநுபல்லவி சூராதி சூரன் ராமன் எனும் பேரன் சுகுண தீரன் ரவிகுலகு மாரன் - இவனை (ஆரெ) சரணங்கள் 1. ஆதியில் தசரதன் புத்திர காமெஷ்டி யாகம் செய்ய வென்று தொடுத்தான்-வந்த |