பக்கம் எண் :

39

     அந்தரம்                 நாடிய
     இந்திரன்                 கூடிய     (தேவி)

சரணங்கள்

1. மாபத்தியால் கங்கை ஆடத்தடை   பெற்ற
     மாமுனிகண்டு வெகுண்டுபயஞ்  சுற்ற
  கோபத்தி னால்இடு சாபமொழி     மெத்த
     கூறையிலே கரும் பாறைவடி    வுற்ற      (தேவி)

2. வெம்பிய மாமுனி கண்ணில் எதிர்ப்   பட்ட
     வேளையிற் கண்டு பொறாமல் முனி திட்ட
  அம்பொன் முடிதொட் டடியளவும்     முட்ட
     ஆயிரங்கண் அந்த வாசவனுக்     கிட்ட     (தேவி)

3. ஞானத்தி னால்உன்னை ஓதினபேர்க்      கெந்த
     நன்மையுண் டாமோ அறியேன் இப்போ திந்த
  கானத்திலே உந்தன் பாதத் தூள்கள்       சிந்த
     கல்உரு மாறி அகலியை யாய்          வந்த (தேவி)

---

ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல்

விருத்தம் -13

இடமாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒருமா மணிமே டையில் சீதை
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன்
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரதம் கொண்டானே

தரு-12

சாவேரி ராகம்                            ஆதிதாளம்

பல்லவி

     ஆரோ இவர் யாரோ-என்ன                (ஆரோ)
     பேரோ அறியேன்         

அநுபல்லவி

     கார உலாவும் சீர் உலாவும் மிதிலையில்
     கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர்        (ஆரோ)