413 சரணங்கள் 1. வெள்ளமான வானர வர்க்க-நடுவேதம்பி மேருமலைபோல் அருகே நிற்க-பூணில்லாமார்பம் புள்ளிவில் போடாதமேகம் ஒக்கத்-தோள்வளைநீக்கிப் பூட்டில்லா மந்தரம்போல் சோபிக்க-மூன்றுலோகமும் கள்ள அரக்கர்தினம் கிள்ளிக் கிள்ளி அருந்தக் கொள்ளை கொடுத்தமரர் துள்ளித்துள்ளி வருந்த வள்ளலாகி முறை உள்ளபடி திருந்தப் பள்ளி அரவணையைத் தள்ளி எழுந்திருந்த (ராம) 2. தருமம் ஆகரூபி கரித்தானைப்-பிரசண்டகோ தண்டமும் அண்டமும் பரித்தானைத்-தாமரைபூத்த கருமுகில் போல்அவ தரித்தானே-மரவுரியைக் கச்சை போலவச்சு வரித்தானைச்-சனகன் கன்னி இருவிழியி லுமுள்ள கருமணி எனவந்த திருவுருவினில் ஒளி பெருகிடத் தாய்முந்த விரதம் கொடுத்தமுடி சிரசினில் கொண்டுசொந்த அரசன் கொடுத்தமுடி பரதனுக் கன்றுதந்த (ராம) 3. பூமிதனில் அடிக்கடி வீழ்ந்து-சூரியனைக் கண்ட பூமலர்போல் முகப்பிரபை சூழ்ந்து-ராக்ஷதகுல ஆண்மை எல்லாம் வரவரத் தாழ்ந்து-சாமிகடைக்கண் ஆனந்த சமுத்திரந்தன்னில் ஆழ்ந்து-சுந்தரம் உள்ள காமனை உதவிய மாமனைத் துளசியந் தாமனைத் திருமுகச் சோமனைப் புசபல வீமனைச் சானகி வாமனைத் தேவர்கள் ஆமனை வரும்பணி பூமனைத் தசரத (ராம) ----- விபீஷணர் ஸ்ரீராமரைச் சரணடைதல் விருத்தம்-9 வசமுடன் இப்படிகண்டு நால்வரான மந்திரிகள் வரவிபீஷணனும் வந்தான் நிசமுடன் ராமச்சந்திரன் சந்நிதிக்கு நேராக வரவரக் கண்ணீராருகி |