பக்கம் எண் :

412

2. மந்தர                 கிரியாலே-குழம்புங்கடல்
     வானோர்க்கமுதம்     முன்னாலே-சந்தோஷமாகத்
  தந்ததே                ஒருகாலே-என்னசெய்தாலும்
     சகிப்பார் நல்லோர்    இதுபோலே-ஆகையினாலே

  என்தன் பிறவியும்        தீரும்-இலங்கையிலே
  வந்திடுமே சூரியன்       தேரும்-அரக்கருக்கு
  அந்தம் முத்தியும்        சேரும்-நிலவரமா
  சந்தேகம் இல்லைஇது     பாரும்         (என்)

3. கண்ணீர் ஆறாய்ப்       பெருகுதே-சாமிசொற்கொண்ட
     காதில் இன்பம்       வருகுதே-நெஞ்சும் உடம்பும்
  வெண்ணெய் போலே     உருகுதே-மயிர்க்கூச்சிட்டு
     மேனிபுளாகம்        தருகுதே-தாயை விடென்று

     எண்ணினான் சொன்ன      விசாரம்-எண்ணாமல் அவன்
     பண்ணிணானே            ஒட்டாரம் அதனால் இந்தப்
     புண்ணியனைக் கண்டேன்   இந்நேரம்-இது எனக்கு
     அண்ணன் செய்த          உபகாரம்            (என்)

------

விபீஷணர் ஸ்ரீராமருடைய தெரிசனம் செய்தல்

விருத்தம்-8

பத்திவிபீஷணன் இவ்வாறுருகி அடிக்கடி மண்மேற் படிந்துவந்தான்
அத்திமுன்னே கூவவந்த ஆதிமூலப்பரனே அமரர்கூவ
நித்தியகோதண்ட பதிஎனவந்தான் என்குறையும் நீக்கவந்தான்
சத்தியமாம் எனத்தேறி மனங்கொண்டான் ராமதரிசனங் கண்டானே

தரு-7

மோகனராகம்                             ஆதிதாளம்

பல்லவி

ராமனைக்கண் ணாரக்கண்டானே-விபீஷணன்கை
மாமுடிமேல் வைத்துக்கொண்டானே                    (ராம)

அநுபல்லவி

காமனும் செங்கமலப்            பூமனும் பணிபரந்
தாமனை ஆயிர                நாமனைக் கோதண்ட (ராம)