411 கத்தும் யானைஓசை கண்டு காத்தானே மாயன்பண்டு சத்துரு ராவணன் தம்பி தானானாலும் என்னை நம்பி (சர) 3. சங்கரா அபயம் என்றானே மார்க்கண்டன் அவன் பொங்கிய காலனை வென்றானே வங்கையோ ஈதென்ன வீரியம் மாருதி சொன்னதே காரியம் அங்கவன் வந்தென்னை மேவஅழைத்து வாநீ சுக்கிரீவா (சர) ------ சுக்கிரீவன் அழைத்தபோது விபீஷணர் சொல்லிக்கொண்டு வருதல் விருத்தம்-7 என்னரகுராமன் உரைப்படி வாரும்சாமியிடம் எனச்சுக்கிரீவன் சொன்னதை வீடணன் கேட்டுப்புளகித்தான் கண்களில்நீர்சொரியநின்றான் பின்னைஎனும் சீதைதனைப் பிரிவித்தபாவியுடன் பிறந்தபாவி என்னையும் வாஎன்றாரோ சாமிஎன்றே தொழுகின்றான் எழுகின்றானே தரு-6 ஆனந்தபைரவிராகம் ஆதிதாளம் பல்லவி என்னையும் வரச்சொன்னாரோ - ரகுநாயகர் என்னையும் ராட்சதன் என்றுன்னாரே (என்) அநுபல்லவி அன்னையாம் சீதாதேவியைக் கொண்டுபோனபாவி தன்னுடனே பிறந்த சண்டாளனாகிவந்த (என்) சரணங்கள் 1. நெஞ்செற்கிருபை இதுதானோ-சாமிஎண்ணின நிணறுநான் அறிவேனோ-பாவங்களுக்கு அஞ்சினான் என்றசொல் உண்டோ-அடிமைகொள்ளல் ஆம்என மனது கொண்டோ-பாதகங்களுக்கு தஞ்சம் எனஎண்ணினாரோ-ராவணன் செய்த வஞ்சம் எனஎண்ணினாரோ-சிவனார்உண்ட நஞ்கம் எனஎண்ணினாரோ-இவன் எம்மாத்திரம் கொஞ்சம் எனஎண்ணினாரோ (என்) |