பக்கம் எண் :

410

தேவிக்கும் பெண்ணைக் கொண்டு தேற்றச்சொல்லி அகன்றான்
ஆவத்தை இவனாலேவந் தபயம் அபயம் என்றான்       (இந்த)

-----

விபீஷணர் சரணாகதத்தைக் குறித்து ஸ்ரீராமர் கூறல்

விருத்தம்-6

    தொடரா அனுமான் இந்த வண்ணம்
           சொன்ன மொழியும் கவித்தலைவர்
    இடரா உரைத்த வாய்மொழியும்
           இரண்டு மொழியும் மனங்கொண்டான்
    உடனே அபயம் என்றவருக்கு
           உயிர் ஆனாலும் கொடுப்பதுவே
    கடனாம் எனஎல்லார்க்கும் மனம்
           கரைப்பான் ராமன் உரைப்பானே

தரு-5

சௌராஷ்டிரராகம்                         அடதாளசாப்பு

பல்லவி

சரணம் சரணம் என்றானே காவாதேவிட்டால்
திரணம் அல்லவோ நான்தானே                  (சர)

அநுபல்லவி

அரியவிபீ ஷணன்அங்கே அரக்கனானாலும் இங்கே
இருசெவி கேட்க வாய்விட்டு ராகவா என்று கூப்பிட்டு     (சர)

சரணங்கள்

1. ரவிகுலத்தில் வந்தேனே            தண்டகாரணிய
  தவசிகட் குரைதந்தேனே        
  சிவிராசன் புறவாலே             தேகம்ஈந்தானே மண்மேலே
  கவலையால் இவன்ஏதோ நொந்து  கதறிக் கொண்டிங்கே வந்து (சர)

2. பெற்ற சடாயுவும் பாய்ந்தானே       மருமகட்காய்
  உற்றபோரில் ஓடிமாய்ந்தானே