409 ஒன்றுமே பிசகாதென் றெழுந் தவ்வூரை ஒழிந்து வானரச்சேனைக் கொழுந்தின் முன்னே சென்றுரா கவசரணம் என்ற வார்த்தை சீராமன் கேட்க மயிந்தனும்போய்ச் சொன்னான் அன்று ராகவன்பலர் யோசனையும் கண்டான் அதுபோதில் அனுமந்தன் இதுசொல் வானே தரு-4 உசேனிராகம் ஆதிதாளம் பல்லவி இந்தவி பீஷணன் மீது-நமக்கு இத்தனை யோசனைஏது (இந்த) அநுபல்லவி அந்தஇலங்கையிலே அறிந்தேன் இவனை முன்னே சந்தேகம் இல்லைசாமி தாசன் அனுமான் சொன்னேன் (இந்த) சரணங்கள் 1. சொல்லும் புராண வேத சாத்திரம்-இவன் செய்வது தேவதா தோத்திரம் பல கல்வி கேள்விக்கெல்லாம் பாத்திரம்-கள்ளம் கபடமறியான் அணு மாத்திரம்-இது அல்லாமல் அவன் வீட்டில் அடுத்தபோதில் அனேகம் நல்லநல்ல சகுனம் நான்கண்டேன் அனுபோகம் (இந்த) 2. ஊத்தையான அள்ளும் கள்ளும்-இவன் உண்கின்றான் என்பதைத் தள்ளும்-கண்டால் ஏற்றவன் என்றுநீர் கொள்ளும்-நல்ல இங்கிதவான் எவர்க் குள்ளும்-இவன் நேற்று ராவணன் என்மேல் நீட்டிய கத்தி வெட்டை தீர்த்து விட்டே எனக்குச் செய்தான் பிராணபிரதிஷ்டை (இந்த) 3. மூவர்க்கும் கூடாத வெற்றி-கூட முடிப்பதல்லோ உன்தன் சத்தி-சிறு கூவத்தைக் கண்டுகடல் ஒற்றிப்-போன கொள்கை போலாச்சே இந்தப் பெற்றி-சாமி |