பக்கம் எண் :

408

சரணங்கள்

1. உலகும் அரசும் போய்         வெள்ளாட்டியால் காட்டில்
     ஒதுக்குண்டராமன் என்னோ  டெதிர்ப்பானோ அவன் கூட
  விலகிடமாயம் செய்து           குலமங்கையை எடுத்து
     மேடுங்காடும் திரிய         விட்டேனே எங்கும்   தேட
  பலருக்குத் தெய்வம்என்றாய்     இந்திரன் சிறைப்பட்டநாள்
     பாலனோ இவன்என்னோ    டேலாதோசண்டை     போட
  கொலைசெய்யும் அரக்கரை     மனிதன்கொலைசெய்வானோ
     கொல்லத் தெருவில்ஊசி    விற்றால் விலைபோ மோடா(போ)

2. துப்பான வாலி முன்னே       எதிர்த்தவர் பலம்போமே
     தோல்வையோ ஆர்க்குமது  சாபம் என்றறி யோமோ
  இப்போதும் மானிடர்முன்      எனக்குப் பலம்இல்லையோ
     ஈசனையும் மலையோடு     எடுத்ததென்ன பொய் போமோ
அப்பாநான் இருக்கவும்          என்னோடே நீபிறந்தும்
     அந்தநரர்க் கஞ்சியுன்      சிந்தை இப்படி வேமோ
குப்பைக் கீரை கிளைத்துக்       கப்பும் கவடுமாகி
     கொழுத்தாலும் கப்பலுக்குப்  பொருந்தப்பாய் மரமாமோ (போ)

3. அரன் அயன் தந்தவரம்       என்றாய் அவரைக்கூட
     அடிக்க எனக்குவரம்        கொடுத்தார் பொய் சொல்லாதே
  பரிவோ படைமிகுந்தால்        அரண்நிற்குமோ இந்தப்
     பஞ்சை வரர்த்தை விடடா   என்தன் கோபம் பொல்லாதே
  அருகே கள்ளனுமாகி          விளக்கும் பிடித்தாயே ஊர்
     அழித்த குரங்கை விடென்   றுரைத்தாய் அதுவல்லதே
  இரணியன் மகன்அந்த         இரணியனைக் கொன்றாற்போல்
    என்னைக்கொல்ல நினைத்தாய் இனிஎன் முன்நில்லாதே (போது)

-----

சரணம் அடைந்த விபீஷணரைக் குறித்து

ஸ்ரீராமருக்கு அனுமார் கூறல்

விருத்தம்-5

என்றுராவணன் இந்த வார்த்தை சொல்ல
     இரங்கிவி பீஷணன் அண்ணேன் எனதுவார்த்தை