407 எடுத்தாய்-ஆசை தொடுத்தாய்-நன்மை விடுத்தாய்-குடி கெடுத்தாய்-அவள் ஒரு தாய்அடா தாய்அடா-நமக்கொரு தீஅடா தீஅடா-சிறைமேல் எத்தாய் வைத்தாய் பித்தா செத்தாய் சனகிஅல்ல உனையே கொல்ல வந்தவள் (ராக) 3. மேதகுகார்த்த வீரியன்முன் எதிரிட்டாய்-விருதுவிட்டாய் வேதவதி சொன்ன சாபத்தில் அகப்பட்டாய்-பிழைக்க ஒட்டாய் மதமோ உனக்கு அதமோ-எந்த விதமோ லங்கை சதமோ-இத்தனை சூரரும் வீரரும் உனதுகு மாரரும் பேரரும் உன்னுடைய முடியும் கொடியும் நொடியும் மடியும்முன் சீதைபேர வாதைதீரும் -உள்ளது (ராக) ----- விபீஷணரை ராவணன் சீறிக்கூறல் விருத்தம்-4 உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்கும் மின்மினியோ லல்லால் கொதிக்கின்ற என்முன் அந்தக் குரங்கொடு நரர்என் செய்வார் எதிர்க்கின்ற சொல்என் சொன்னாய் எனவிபீஷணனை பார்த்துக் கதிக்கின்ற அரக்கன் பல்லைக் கடிக்கின்றான் படிக்கின்றானே தரு-3 கௌளிபந்துராகம் ஆதிதாளம் பல்லவி போதும் போதும் இந்த புத்திவிபீஷணர் போதும் போதும் சொன்னது போதுமடா (போது) அநுபல்லவி ஏதடா நான்பயப் பட்டு நடுக்குமோ எலியைக் கண்டுபூனை ஏங்கிக் கிடக்குமோ நாதன் ஆனநானோ உன்சொல்லைக் கேட்பது நரிவாலைக் கொண்டோ கடல்ஆழம் பார்ப்பது (போ) |