பக்கம் எண் :

55

8.    சந்தி செபதங்கள் எல்லாம் உன் சரத்துக்கே
              தந்தேன் ரகு                       ராமா
     வந்தவழி பார்த்துக் கொண்டோடிப் போவதே நல்ல 
              மார்க்கம் பரசு.                      ராமா

-0-0-

ஸ்ரீ ராமர் திரு அயோத்தியைச் சேர்தல்

விருத்தம் - 24 

     இன்னவகை சொன்னரா கவனை வாழ்த்தி
          இனியதவம் செயப்பரசு ராமன் போனான்
     அன்னவன்கைக் கொண்ட வில்லை வருண ராசன்
          அடைக்கலமா வைத்துவிட்டு ராமச் சந்திரன்
     மன்னவரும் தேவியரும் தேர்மேற் கொண்டு
          வரஅருகே தானும்மணித் தேர்மேல் ஏறி
     மின்னனைய சீதையுடனே சந்தோஷம்
          மிகவந்தான் அயோத்திமா நகர்வந் தானே 

பாலகாண்டம் முற்றிற்று.

சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம்

வசனம்-1 விருத்தங்கள்-24 தோடையம்-1 திபதைகள்-3 தருக்கள்-18 ஆக 47