56 பாலகாண்டம் கடவுளர் வணக்கம். விருத்தம்-1 - தோடயம்-1 தழைசெவி சிறுகண் தாழ்கை தந்தசிந் துரமும் தாரை மழைமதத் தறுகண் சித்ர வாரண முகத்து வாழ்வை இழையிடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற குழவியைத் தொழுவன் அன்பால் குறைவர நிறைக என்றே (பாயிரம்-மிகை-13) பொத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலயை அமலை தன்னை மொய்த்தகொந் தனக பார முகிழ்முலை தவள மேனி மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செவ்வாம் (பாயிரம்-மிகை-12) தருகை நீண்ட தயரதன் தான்தரும் இருகை வேழத் திராகவன் தன்கதை திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட குருகை நாதன் குறைகழல் காப்பதே (பாயிரம்-மிகை-9) அரசியல் விருத்தம்-2 - தரு-1 ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும் ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும் நீதிந் நிலையும் இவை நேமியி னோர்க்கு நின்ற பாதிம் முழுதும் இவற்கே பணிகேட்ப மன்னோ (அரசியற்படலம் 2) தாயொக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் சேய்ஒக்கும் முன்னின் றொருசொல் கதியொக்கும் நீரால் நோய் ஒக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்குகேள்வி ஆயம் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான் (அரசியற்படலம் 4) |