57 வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர் உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன் தள்ளரும் பெரும்புகழ்த் துயரதப்பெயர் வள்ளல்வள் ளுறைஅயில் மன்னர் மன்னனே (அரசியற்படலம் 6) குன்றென உயரிய குவவுத் தோளினான் வென்றிவெம் திகிரிவெம் பருதி யாமென ஒன்றென உலகிடை உலாவி மீமிசை நின்றுநின் றுயிர்தொறும் நெடிது காக்குமே (அரசியற்படலம் 11) துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் பனிவென்ற படியென்ன பகைவென்று படிகாப்போன் தனுவன்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் சக்ரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் விருத்தம்-3 - தரு-2 அறுபதி னாயிரம் ஆண்டும் மாண்டுற உறுபகை ஒடுக்கியிவ் வுலகை ஓம்பினேன் பிறிதொரு குறையிலை என்பின் வையகம் மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டரோ (திருவவதாரப்படலம் 3) அருந்தவ முனிவரும் அந்த ணாளரும் வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் இருந்துயர் உழக்குநர் என்பின் என்பதோர் அருந்துயர் வருத்தும்என் அகத்தை என்றனன் (திருவவதாரப்படலம் 4) பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு விருத்தம்-4 - தரு-3 பொன்வரை இழிவதோர் புயலின் பொற்புற என்னைஆள் உடையவன் தோள்நின்ற எம்பிரான் சென்னிவான் தடவும்மண் டபத்தில் சேர்ந்துஅரி துன்னுபொற் பீடமேல் பொலிந்து தோன்றினான் (திருவவதாரப் படலம் 13) |