58 ஐயிரு தலையினோன் அனுசர் ஆதியாம் மெய்வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே செய்தவம் இழந்தன திருவின்நாயக உய்திறம் இல்லைஎன்று உயிர்ப்பு வீங்கினார் (திருவவதாரப்படலம் 15) எங்கள்நீள் வரங்களால் அரக்கர் என்றுளார் பொங்குமூ வுலகையும் புடைத்த ழித்தனர் செங்கண் நாயகஇது தீர்த்தி இல்லையேல் நுங்குவர் உலகைஓர் நொடியில் என்றனர் (திருவவதாரப்படலம் 16) தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு விருத்தம்-5 - தரு-4 வானுளோர் அனைவரும் வான ரங்களாய் கானிணும் வரையினும் கடித டத்தினும் சேனையொ டவதரித் திடுமின் சென்றென ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் (திருவவதாரப்படலம் 18) மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர் நிசரத கணைகளால் நீறு செய்யயாம் கசரதத் துரகமாக் கடல்கொள் காவலன் தசரதன் மதலையாய் வருதும் தாரணி (திருவவதாரப்படலம் 19) வளையொடு திகிரியும் வடவை தீதர விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும் இளையர்கள் எனஅடி பரவ ஏகிநாம் வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன் (திருவவதாரப்படலம் 20) என்னையா ளுடைய ஐயன் கலுழன்மீ தெழுந்து போய பின்னர்வா னவரை நோக்கிப் பிதாமகன் பேசு கின்றான் முன்னரே எண்கின் வேந்தன் யான்என முடுகினேன் மற்று அன்னவா றெவரும் நீர்போய் அவதரித்திடுமின் என்றான் தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு மருவலர்க் கசனி யன்ன வாலியும் மகனும் என்ன |