59 இரவிமற் றெனது கூறங் கவர்க்கிளை யவன்என்று ஓத அரியும்மற் றெனது கூறு நீலன்என் றறைந்திட் டானால் வாயுமற் றெனது கூறு மாருதி எனலும் மற்றோர் காயும்மற் கடங்க ளாகிக் காசினி அதனின் மீது போயிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானும் காற்றின் சேயெனப் புகன்றான்மற்றைத் திசையுளோர்க் கவதி யுண்டோ (திருவவதாரப்படலம் 23, 24, 25) பெருமாள் திரு அவதாரம் விருத்தம்-6 - தரு-5 தெரிவையர் மூவரும் சிறிதுநாள் செலீ மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின் பொருவரு திருமுகம் அன்றி பொற்பு நீடு உருவமும் மதியமொடு ஒப்பத் தோன்றினார் (திருவவதாரப்படலம் 19) ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டும் சோதியை திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை ஆசையும் விசும்பும்நின்று அமரர் ஆர்த்தெழ வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துறப் பூசமும் மீனமும் பொலிய நல்கினார் மாசறு கேகயன் மாது மைந்தனை தளையவிழ் தருவிடைச் சயில கோபனும் கிளையும் அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற அளைபுகும் அரவினோடு அலவன் வாழ்வுற இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி படங்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார் நடங்கிளர் தரமறை நனிமகிழ்ந்திட மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட விடங்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள் ஆடினர் அரம்பையர் அமுத ஏழ்இசை பாடினர் கின்னரர் துவைத்த பல்இயம் |