பக்கம் எண் :

60

வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே
                                 (திருவவதாரப்படலம் 101-105)
 

கௌசிகர் ஸ்ரீ ராமரைக் குறித்துக் கேட்குதல்

விருத்தம்-7 - தரு-6

நிலம்செய்தவம் என்றுணரின் அன்றுநெடி யோய்என்
நலம்செய்வினை உண்டெனினும் அன்றுநகர் நீயான்
வலம்செய்து வணங்கஎளிவந்தஇது முந்துஎன்
குலம்செய்தவம் என்றினிது கூறமுனி கூறும்

என் அனைய முனிவரரும் இமையவரும்
     இடையூறுஒன்று உடைய ரானால்
பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரையும்
     பாற்கடலும் பதும பீடத்து

அந்நகரும் கற்பகநாட் டணிகவரும்
     மணிமாட அயோத்தி என்னும்
பொன்னகரும் அல்லாது புகல்உண்டோ
     இகல்கடந்த புலவு வேலோய்.
                                     (கையடைப் படலம் 7,8)

தருவனத்துள் யான்இயற்றும் தகைவேள்விக்கு
     இடையூறாத் தவம்செய் வோர்கள்
வெகுவரச்சென் றடைகாம வெகுளியென
     நிருதர்இடை விலக்கா வண்ணம்

செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர்
     நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத்தந் திடுதியென உயிர்இரக்கும்
     கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்
                                       (கையடைப்படலம் 11)

சக்கரவர்த்தி அதை மறுத்தல்

விருத்தம்-8 - தரு-7

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்
     மருமத்தின் எறிவேல் பாய்ந்து