பக்கம் எண் :

61

புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தா
     லெனச்செவியில் புகுத லோடும்
உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த
     ஆருயிர்நின்று ஊச லாடக்

கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான்
     கடுந்துயரம் காவ வேலான்
தொடையூற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான்
     ஒருவண்ணம் துயரம் நீங்கி

படையூற்றம் இலன்சிறியன் இவன்பெரியோய்
     பணிஇதுவேல் பனிநீர்க் கங்கை
புடையூற்றும் சடையானும் நான்முகனும்
     புரந்தரனும் புகுந்துசெய்யும்

இடையூற்றுக் கிடையூறாய் யான் காப்பென்
     பெருவேள்விக்கு எழுக என்றான்
                                         (கையடைப்படலம் 13)

வதிஷ்டர் தகவுரைத்தல்

விருத்தம்-9 - தரு-8

கறுத்த மாமுனி கருத்தை உன்னிநீ
பொறுத்தி என்றவற் புகன்று நின்மகற்கு
உறுத்த லாகலா உறுதி எய்தும்நாள்
மறுத்தி யோஎனா வசிட்டன் கூறுவான்

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம்போய்
மொய்கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்
ஐய நின்மகற்கு அளவில் விஞ்சைவந்து
எய்து காலமின்று எதிர்ந்தது என்னவே
                                      (கையடைப்படலம் 15, 16)

அன்ன தம்பியும் தானும் ஐயனாம்
மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டாலெனச்
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல்
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்
                                        (கையடைப்படலம் 21)