62 கௌசிகர் ஸ்ரீ ராமருக்கு நீதி சொல்லுதல் விருத்தம் - 10 - தரு-9 சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் நிலம்புக மிதித்தனள் நெளிந்த குழிவேலைச் சலம்புக அனல்தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம்புக நிலக்கிரிகள் பின்தொடர வந்தாள் இறைக்கடை துடித்தபுரு வத்தள்எயி றென்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயாள் மறைக்கடை அரக்கிவட வைக்கனல் இரண்டாய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாள் (தாடகைவதைப்படலம் 29, 30) மேகமவை பற்றுபு பிழிந்தனள் விழுங்கா மாகவரை இற்றுக உதைத்தனள் மதித்திண் பாகமெனும் முற்றெயிறு அதுக்கி அயில்பற்றா ஆகமுற உய்த்தெறிவென் என்றெதிர் அழன்றாள் அண்ணல்முனி வற்கது கருத்தெனினும் ஆவி உண்என வடிக்கணை தொடுக்கிலன் உயிர்க்கே துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுள ளேனும் பெண்என மனத்திடை பெருந்தகை நினைத்தான் (தாடகை வதைப்படலம் 34, 35) தீதுஎன்று உள்ளவை யாவும் செய்துஎமைக் கோதென்று உண்டிலள் இத்துணையே குறை யாதென்று எண்ணுவது இக்கொடி யாளையும் மாதுஎன்று எண்ணுவ தோமணில் பூணினாய் (தாடகைவதைப்படலம் 37) மன்னும் பல்லுயிர் வாரிதன் வாய்ப்பெய்து தின்னும் புன்மையின் தீமையது ஏதுஐய பின்னும் தாழ்குழல் பேதமைப் பெண்இவள் என்னும் தன்மை எளிமையின் பாலதே ஈறில் நல்லறம் பார்த்திசைத் தேன்இவட் சீறி நின்றிது செப்புகின் றேன் அலென் |