பக்கம் எண் :

63

ஆறி நின்றது அருளன்று அரக்கியைக்
கோறி என்றுஎதிர் அந்தணன் கூறினான்
                                   (தாடகைவதைப்படலம் 42, 43)

தாடகை முதலானவர்கள் வதம்

விருத்தம்-11 தரு-10

மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும்
கோல வில்கால் குனித்ததும் கண்டிலர்
காலனைப் பறித்து அக்கடி யாள்விட்ட
சூலம் அற்றுவீழ் துண்டங்கள் கண்டனர்

அல்லின் ஆயது அனைய நிறத்தவன்
சொல்லும் மாத்திரை யின்கடல் தூர்ப்பன
கல்லின் மாரியைக் கைவகுத் தாள்அவை
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்

சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுத்தலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தாங்காது அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே

பொன்னெடும் குன்றம் அன்னாள் புகர்முகப் பகழி என்னும்
மன்நெடுங் கால வன்காற்று அடித்தலும் இடித்து வானில்
கல்நெடு மாரி பெய்யக் கடையுகத் தெழுந்த மேகம்
மின்னொடும் அசனி யோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள்

                                    (தாடகை வதைப் படலம் 47-50)

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது அங்கு
ஒருவனை அந்தக புரத்தின் உய்த்ததே

                                     (வேள்விப்படலம் 41)

அகலிகை சாபவிமோசனமும், சரித்திரமும்

விருத்தம்-12 - தரு-11

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவம்