557 தரு-77 பந்துவராளிராகம் ஆதிதாளம் பல்லவி இப்படியா அவசகுனம் கண்டானே-கண்டராவணன் இடும்பாலே எண்ணாமற் சென்றானே (இப்) அநுபல்லவி கைப்படை ஆனதைச் சேகரம் பண்ணி காகுத்தன் சரத்துக்குக் கொடுத்திடஎண்ணி அப்படி வந்தானே ராமன்மேலே அறிந்திருந்தும் புத்தி கெட்டவன் போலே (இப்) சரணங்கள் 1. ஆனைகளும்குதி ரைகளும் பின்னுக்கு வாங்கி டக்கால்பதறவும் அறுந்த கொடிமேல் பகுந்து விழவும் அங்கே ரத்தத்துளி சிதறவும் சேனைகாவலர் வாயெலாம் வெறும் பானைபோல் வறண் டுதறவும் சேரநாய்களும் பேய்களும் அழச் சூரியனைப் பார்த்தோர் கதறவும்(இப்) 2. தோள்வளைசரிய மாலைகள்கரிய இடப்புறக்கண்கள் துடிக்கவும் தோகைமாரழக் காகம்மேல்விழ ஆகாவாய்ச்சொல் படிக்கவும் வாளின்வாய்முனை மடங்கவும் கருந்தூளி ஆனது பிடிக்கவும் வானின்மேற் கருமேகம் இல்லாமல் வல்லிடி இடிக்கவும் கொள்ளிகள் பிடிக்கவும் (இப்) 3. முறைமுறையாத் தேரிலே கட்டும் விருதுகேதனம் அழியவும் முரசம் பேரியம் டமாரமும் சருகுபோலே இழியவும் மறவர்கள் பூசும் சந்தனம்வறவ றென்றுபோய்க் கழியவும் மண்மாரிகள் ஆனவை பொழியவும்பெண்ஆனையிலேமதம் வழியவும் (இப்) ----- ஸ்ரீராமர் தேர் ஏறுதல் சந்தவிருத்தம்-95 ஆசைகள்அதிர இவரவ சகுனம் இராவணன் எதிர்படப் தேர்விடலால் ஆண்மைகள் பெருகிய நீமறுபடி அனுமான் மிசைவருதல்ஒணாதுமுனே |