558 மாசறுசதுமுகன் நேசமொடுதவிய வாசவன் விடுகிற தேரிதன்மேல் மாருதிபுசமென ஏறுதிஎனவரு மாதலிஉரைசெய ஆதரவாய் ஏசறுமுதுமறை ஏறிடவிதிநிலை ஏறிடமுனிவர்கள் தேவர்கள் ஈ டேறிட மகம்நிறை வேறிட அவரவர்ஏறிய பதவியில் ஏறிடவே வீசிடமழைபொழி கார்முகிலொளிவிடு மேருவென் மலைமிசைஏறுதல்போல் வீரன் இரவிகுலசூரன் அதுலரகுவீரன் இரதமிசை ஏறினனே தரு-78 சாவேரிராகம் அடதாளசாப்பு பல்லவி தேர்ஏறினானே-ராமச்சந்திரன்-தேர்ஏறினானே- (தேர்) அநுபல்லவி பார்மேலே வைப்பது நேரல்ல அரவிந்த பாதம்வைப் பாயென்று மாதவி கொடுவந்த (தேர்) சரணங்கள் 1. சோதி மதிநுதலில் திருநாமம் அணிந்திட்டு துலங்கும் அம்பறாத்தூணி வலப்புறத் தினிலிட்டு காதல் செய்யுந்தும்பை மாலைதோள் மேலிட்டு கச்சைகட் டியமார்பில் வச்சிர கவசந்தொட்டு குரோதம் செய்யும்இள நகை விடுத்துக்கொண்டு பாதம் தன்னில்மிதி யடி தொடுத்துக்கொண்டு கோதண்டம் ஒருகை யினில் எடுத்துக்கொண்டு தாய்தந்த மரவுரி யினை உடுத்திக்கொண்டு (தேர்) 2 ஆரவா ரம்செய்யும் வீர வரண்டையம் சாத்தி அங்கைத் தலத்துக்கு முன்கை கட்டியும் ஏற்றி தாரணி உள்ளோரும் வானவரும் போற்றி தான் சொல்லவே லட்சுமிகாந்தனென்றே தோற்றி வீரபட்டம் விசாலம் உள்ள நெற்றி நேரில் இட்டதி காரம் உள்ள கத்தி ஓர்வலப்புறம் மீதினில் சுற்றி ஆரும் ஒப்பிடொ ணாதொரு வெற்றி (தேர்) |