பக்கம் எண் :

588

தரு-91

சைந்தவி ராகம்                           திரிபுடை தாளம்

பல்லவி

இனிநான் இருக்கலாமோ-தாயே                  (இனி)

அநுபல்லவி

அனியாயத்தில் அய்யனுக் காகாமற்போய்          (இனி)

சரணங்கள்

1. மறுவில்லா வரங்கொண்டேன்              நானே-அண்ணன்
     வழிபார்த்துப் பார்த்தென்தன் விழியும்பூத் தேனே
  சிறுபிள்ளைப் பருவம் நான்               தானே-இதிலே
     சிறகுபறிகொடுத்த பறவையாய்ப்போ      னேனே    (இனி)

2. வருத்தம் அறியான்சாமி                 கொஞ்சம்-அறிந்தால்
     வாராமல் இருப்பானோ எனக்குண்டோ  தஞ்சம்
  நெருக்குதே கவலைப்பிர                 பஞ்சம்-என்னை
     நெருப்பிலே போட்டாலும் வேமோஎன்  நெஞ்சம்    (இனி)

3. அரசனுக் குதவாமல்                கெடுத்தேன்-அண்ணன்
     அருமந்த முடிக்கும்நான் சடைமுடி கொடுத்தேன்
  தருமத் துரையைக் காட்டில்          விடுத்தேன் பரதன்
     சாமித்துரோகி என்றே எங்கும்பேர் எடுத்தேன்      (இனி)

4. அய்யர் அன்னை சொல்லை நோ         காமல்-கேட்க
     அளிக்கத்தக்கவன் திருவுளத்துக்கா காமல் பல
  செய்தேன்வெகு குற்றம்போ               காமல்
     தீட்டுக்கு முழுக்கொன்றா நெருப்பில்மூழ் காமல்    (இனி)

------

ஸ்ரீராமர் வரவை அனுமார் பரதருக்குக் கூறல்

விருத்தம்-114

தந்தாய் கௌசலை வந்தா ளொடுபர தன்பா டுகளிவை முன்கூறி
நொந்தார் அனலை வலஞ்சூழ் பொழுது குழந்தாய் குழியில்
                                         அமிழ்ந்தாதே
அந்தோ பொறுபொறு மைந்தா பொறுபொறு அன்பாய்
                                         உனதுமுகந்தேடி
வந்தான் ரகுபதி வந்தான்என அனுமன்தான் இஃதுரை தந்தானே