589 தரு-92 மத்தியமாவதி ராகம் அடதாளசாப்பு பல்லவி வந்தான் வந்தான் பரதா-ரகுராமன் வந்தான் வந்தான் பரதா (வந்) அநுபல்லவி வந்தான் வந்தான் மோதிரம் தந்தான் தந்தான் கைமேல் இந்தா இந்தா தீயினில் முந்தா தேமுந் தாதே (வந்) சரணங்கள் 1. நாயகன் சொல் மறந்தாய் அண்ணா என்று பேயனைப்போல்பறந்தாய் தாயரையும் துறந்தாய் பழிபோட நீயிதற்கோ பிறந்தாய் சேயின் முகம்பார்க்கும் தாயின் முகம்போலே காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே தீயும் பயிருக்கும் பேயும் மழைபோலே மாயன் கஜேந்திரனுக் காய்வந் தது போலே (வந்) 2. பொருந்தாத புத்திதந்தாய் அலைவாயிற் கரும்புபோல் மெத்தநைந்தாய் துரும்புபோல் வற்றிநொந்தாய் வீழ்வேன் என்று பெருந்தீயைச் சுற்றி வந்தாய் அரும்பதினாலாண்டு ஆச்சென்றதி னாலே வருந்தும் தம்பிமடிவான் என்றொருக் காலே பரிந்திதோ சித்திர கூடத்துக்கிப் பாலே பிரிந்த கன்றைத் தேடித் திருமபும் பசுவைப் போலே (வந்த) 3. தீமைவினைகள் மண்டு ராவணப் பாமரன் ஆவிஉண்டு சேம வெஞ்சேனை கொண்டு பரத்துவாச மாமுனி பூசைகண்டு சாமி ரகுகுல சோமன் இதோ வந்தான் பூமகள் சானகி வாமன் இதோவந்தான் ஓமென்னும் ஆயிர நாமன் இதோ வந்தான் நீமறவரகு ராமன் இதோ வந்தான்(வந்த) |