603 தரு-99 கேதாரகெளைராகம் ஆதிதாளம் பல்லவி சிங்காரம் செய்தானே பரதன் அபிஷேக மண்டபம் சிஙகாரம் செய்தானே பரதன் (சிங்) அநுபல்லவி துங்க நவமணிகள் எங்கும் இருந்து வெய்ய சூரியப் பிரபைகள்மேலே வாரிப்பிரபைகள் பெய்ய இங்குள்ள பேருடன் அங்குள்ளபேரும் உய்ய ரகுராமனுக்குத் துய்ய மகுடாபிஷேகம் செய்ய (சிங்) சரணங்கள் 1. விவர நீலத்திலும் கோமேதகத்திலும் வேதிகையும் சிறந்த போதிகையும் அடுக்கி குவியும் உபானமும் பதுமமும் யாளமும் கோமளத்தால் அடுக்கி தவளப் பளிங்குத்தள வரிசை வகுத்ததின்மேலே சாதிமாணிக்கச் சிங்காதனம் பதித்தொழுங் காலே பவளத் தூண்கள்நட்டு மதலைசெய் தொருகாலே பதம்விரும்பும் தொண்டர் இதயகமலம் போலே (சிங்) 2. துய்யமருமலர்ச் சரங்களை நிரைநிரை தூக்கி வகையாய்மேற் கட்டிகள் திருத்தி பையக் கவரிகள் கையினாலசைக்கும் பதுமைகள் சுற்றும் இருத்தி எய்தும் அவர்மனதில் ஐயம் சொல்லச்சொல்ல இதுவோ அயோத்திநகர் இதுவோ அல்லஅல்ல ஐயாஇது அந்த வைகுந்தம்என்று சொல்ல ஆணிப்பொன்னாலே எங்கும் வாணித்து நல்லநல்ல (சிங்) 3. தேடிஉலகங்கள் நாடிக் கும்பிடும் சிகரகும் பங்கள்பல தகதகென்று மின்னவே ஈடுள்ள புவிக்குக்கண் ணாடிபோற் செய்தானே எங்கும் நிகநிக என்னவே |