பக்கம் எண் :

604

 பாடிக்கொள் வேதமோ ஆயிரந்தலை நாகப்
     பாம்பணையோ கடலோ அந்தநாகரிக
வேடிக்கை நான்சொல்லக் கூடுமோ தேவலோக
     விசுவுகர்மாவினாலே உசிதம் உசிதமாக            (சிங்)

------

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்

விருத்தம்-124

    சித்திரமண் டபத்தினிலே உள்ளங்கொண்டு
          தேவர்கள்மா னிடர்கள் செய்யும் சேவைகொண்டு
    சுத்திபெறு குகன்விபீ ஷணன் சுக்கிரீவன்
          துணைவர்பணி கொண்டுசிங்கா தனமேற்கொண்டு
    சத்தியமும் நீதியும்மேற் கொண்டு துள்ளச்
          சகலமும்கைக் கொண்டு செங்கோல் கொண்டராமன்
    பத்தினிசா னகியுடனே உலகை ஆளும்
          படிகொண்டான் அபிஷேக முடிகொண்டானே

தரு-100

சௌராட்டிரராகம்                         ஆதிதாளம்

பல்லவி

மகுடாபி ஷேகம்கொண்டானே-ஸ்ரீராமச்சந்திரன்
மகுடாபி ஷேகம்கொண்டானே                        (மகு)

அநுபல்லவி

சகலர ராசர்களும்               சகல தேசர்களும்
சகலர வேதியரும்               சகல சாதியரும்
சகல மந்திரிகளும்               சகல தந்திரிகளும்
சகல முனிவர்களும்             சகல மனிதர்களும்
சந்திராதி மூவர்களும்            இந்திராதி தேவர்களும்
சந்தோஷ மாப்பொருந்து         சிங்காதனத்திருந்து         (மகு)

சரணங்கள்

1. மாதவ முனிவர்கள் புடைகூட பலவேதியர்கள் மறைபாட
     வானவரானவர் மலர்போட ரம்பை மேனகைஊர்வசி நடமாட