605 மாதலத்தில் உள்ளதீர்த்தமும் ஓதுசமுத்திர தீர்த்தமும் வரிசையுடன் அனுமான் கொண்டுவர சோதிமிக்க ஆலாத்தி மீதில் லட்சுமிப்பெண்கள் சோபனஞ் சொல்லிக் கொண்டுவர வானகத்தில் அமுர்தத்தை மானமிகு முனிவர்கள் மகிழ்ந்து மகிழ்ந்தாசிகள் விண்டுவர ஞானமிக்க நாரதர் கானமிக்க வித்தைமுறை நானா விதம்பாடிக் கண்டுவர மகதர் குருதர்பலர் கவுடயவனர்பலர் வடுகர்குடகர்பலர் துளுவர் சளுவர்பலர் வங்கர் கங்கர்பலர் கொங்கணர் தெங்கணர்பலர் மாளவர் சாளவர்பலர் லாடர்கள் மாராடர்பலர் வங்கா ளம்பத் பரத்து ளோர்பலர் கொங்கீழங்குச்சரத்து ளோர்பலர் வந்தே சந்தித் திறைஞ்சி முடிபணி யுந்தோறும் பட்டுதிர்ந்த பொடிமணி வைத்த பதத்தில் உறுத்தி மற்றவர் சுற்றிலும் ஒற்றி வரச்சில கொற்றவர் மட்டுவ குத்துவ ரச்சில கட்டியம் உரைத்திடுபட்டர் செலச்செல வாமப ராக்கு வெகு நாமப ராக்கு ரண வீமர்ப ராக்கு ரகு ராமர் ராமக்கு என வாசவர்க்கும் கேசவர்க்கும் ஈசுரர்க்கும் மீசுரர்க்கும் வல்லோர் எனப்பிதிர்கள் பல்லோர்களும் துதிக்க நல்லோர் களும்கதிக்க எல்லோர்களும் துதிக்க (மகு) 2. பூசுர வசிட்டன் நிசு வாசன்-உர கேசவன் குறுமுனிவன் பரத்து வாசன் பூசுத கௌத மனுடன்வி யாசன்-மிகு காசிபன் கோசிகன் துரு வாசன் பூந்துகில் சுற்றிநல் மாந்தழைவைத்ததிவ்ய பூரணகும்பம் அவரவர் கொடுக்க ஏந்து நெய்யும் பொரியும் மாந்திஅக்கினிதேவன் எழும்பி எழும்பி வரக்கொழுந் தெடுக்க போந்த முகுர்த்தம்வந்து நேர்ந்ததெனத்திரண்டு புண்ணிய புரோகிதர் கடு கடுக்க |