636 காலனை ஒக்கும் தூதன்காற்றெனும் கடவுள் என்றார் மேலும் ஒன்றுரைத்தார் அன்னான் விரிஞ்சனாம் இனிமேல் என்றார் அப்பதம் அவனுக்கீந்தான் அரக்கர்வேர் அறுப்பதாக இப்பதி எய்திநின்ற இராமன் என்றெவரும் சொன்னார் ஒப்பினாள் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ செப்பிஎன் குரங்காய் வந்தார் தனித்தனித் தேவர்என்றார் ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் சேயவள் எளியள்என்னா சீதையை இகழல்அம்மா தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றாத் தாயவள் உலகுக்கெல்லாம் என்பதும் சாற்றுகின்றார் கானிடை வந்ததேயும் வானவர்கடாவ வேயாம் மீனுடை அகழிவேலை விலங்கல்மேல் இலங்கை வேந்தன் தானுடை வரத்தை எண்ணித் தருமத்தின் தலைவர்தாமே மானுட வடிவங்கொண்டார் என்பதோர் வார்த்தை இட்டார் ஆயிரம் உற்பாதங்கள் ஈங்குவந்து அடுத்தவென்றார் தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறியத்தக்கோன் ஏயினதூதன் ஏற்றப்பற்று விட்டிலங்கைத் தெய்வம் போயின தென்றும் சொன்னார் புகுந்தது போரும்என்றார் அம்பினுக்கு இலக்கமாவார் அரசொடும் அரக்கர்எள்ள நம்பரத் தடங்கும் மெய்யன் நாவினிற் பொய்யிலாதான் உம்பர் மந்திரிக்கும்மேலா ஒருமுழம் உயர்ந்த ஞானத் தம்பியே சாற்றிப் போனான் என்பதும் சமையச் சொன்னார் ஈதெலாம் உணர்ந்தேன் யானும் என்குலம் இறுதிஉற்றது ஆதியின் இவனால் என்றும் உன்றன்மேல் அன்பினாலும் வேதனைநெஞ் சின்எய்த வெம்பியான் விளைவ சொன்னேன் சீதையை விடுதியாயின் தீரும் இத்தீமை என்றான் (ஒற்றுக் கேள்விப்படலம் 56, 57, 60, 61, 64,71-81) மாலியவானை ராவணன நிந்தித்தல் விருத்தம்-18 தரு-17 மற்றெலாம் நிற்கஅந்த மனிதர் வானரங்கள் வானில் இற்றைநா ளளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை |