635 தார்உலாம் பணிமார்ப நின்தம்பியே தேர்உலாவு கதிரும் திருந்துதன் பேர்உலாவும் அளவினும் பெற்றனன் நீர்உலாவும் இலங்கை நெடுந்திரு சேதுபந்தனம் செய்தனன் என்றதிப் போதுவந்த புதுவலியோ ஒரு தூது வந்தவன் தோள்வலி சொல்லிய ஏதுஅந்தம் இலாதிருக்கவே சரங்கள் இங்கிவற்றால் பண்டுதானுடை வரங்கள் சிந்துவென் என்றனன் மற்றெமைக் குரங்கலாமை தெரிந்தும் அக்கொற்றவன் இரங்க உய்ந்தனம் ஈதெங்கள் ஒற்றென்றார் மதிநெறி அறிவுசான்ற மாலியவான் நல்வாய்மை பொதுநெறி நிலைய தாகப்புணர்த்துதல் புலமைத்தென்னா விதிநெறி நிலையதாக விளம்புகின்றோரும் மீண்டு செதுநெறி நிலையினாரே என்பது தெரியச்செப்பும் பூசற்கு முயன்று நம்பால் பொருதிரைப் புணரிவேலித் தேசத்திறைவனான தெசரதன் சிறுவனாக மாசற்ற சோதிவெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தையிட்டார் அன்னவற்கிளவல் தன்னை அருமறை பரம்என்றோதும் நன்னிலை நின்றுதீர்ந்து நவையறு பொருள்கள் தோறும் தென்னிலைப் பிரிந்தான் என்னப்பலவகை நின்றதூயோன் இன்னணை என்னயாரும் இயம்புவர் ஏதுயாதோ அவ்வவர்க் கமைந்த வில்லும் குலவரை அவற்றின் ஆன்ற வெவ்வலி வேறுவாங்கி விரிஞ்சனே விதித்தமேல்நாள் செவ்வழி நாணும் சேடன், தெரிகணை ஆகச்சேர்த்திக் கவ்வுஅயில் காலநேமிக் கணக்கையும் கடந்ததென்பார் வாலிமாமகன் வந்தானை வானவர்க் கிறைவன் என்றார் நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக் கரசன்என்றார் |