பக்கம் எண் :

634

கொத்துறு தலையான் வைகும் குறும்புடை இலங்கைக் குன்றம்
தத்துற தடநீர் வேலை தனில்ஒரு சிறையிற்றாதல்
ஒத்துற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால்

சண்டங்கொள் வேகமாரும் தனிவிடை உவணம்தாங்கும்
துண்டங்கொள் பிறையான் மௌலித் துளவினோடும் தொல்லை
அண்டங்கள் எவையும் தாங்கிக் காப்பினும் அறம்இலாதாற்
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால்

தீட்டிய மழுவாள் வீரன் தாதையைச் செற்றான் சுற்றம்
மாட்டிய வண்ணம்என்ன வருக்கமும் மற்றும் முற்றும்
வீட்டிஎன் தாதைக்காக மெய்ப்பலி விசும்புளோரை
ஊட்டுவென் உயிர்கொண்டென்னும் வார்த்தையும் உணர்த்துவீரால்

தாழ்விலாத் தவத்தோர் தையல் தனித்தொரு சிறையில் தங்கச்
சூழ்விலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத்தன் சுற்றத்தோடும்
வாழ்வெலாம் தம்பிகொள்ள வயங்கெரி நாகம் என்னும்
மீள்விலாச் சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால்

நோக்கினிர் தானைஎங்கும் நுழைந்து நீர்இனி வேறொன்றும்
ஆக்குவ தில்லையாயின் அஞ்சல்என்று அவரை ஐயன்
வாக்கினின் மனத்தின் கையின் மற்றிவர் நலியாவண்ணம்
போக்குதி விரைவின்என்றான் உய்ந்தனம் என்றுபோனார்
       (ஒற்றுக் கேள்விப்படலம் 4, 14, 16, 23, 23, 33, 38)

ராவணனுக்கு மாலியவான் புத்தி கூறல்

விருத்தம்-17 தரு-16

வெள்ளவாரி விரிவொடு அவ்வீடணத்
தள்ளவாரி நிலைமையும் தாபதர்
உள்ளவாரும் உரைமின் என்றான் உயிர்
கொள்ளவாய் வெருவும் கொடுங் கூற்றனான்

அடியம் அந்நெடுஞ் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றேம் முதுவேலையின்
படியை நோக்கி எப்பாலும் படர்குறும்
கடிய வேகக் கழுலனின் கண்டிலம்