633 ஓடும் என்முதுகிட்டென ஓங்கியே சேடன் என்னப் பொலிந்தது சேதுவே (சேதுபந்தனப்படலம் 5-9, 11, 13, 38, 42, 45, 65, 66) ஸ்ரீராமர் சுகசாரணரோடு கூறுதல் விருத்தம்-16 தரு-15 ஊழிமுதல் நாயகன் வியப்பினொடு வந்தான் ஆழியன தாழம்உரை செய்யும் அளவன்றே வாழிஇவ் இலங்கை நெடுவன்திசைய தாமேல் ஏழுகடலும் கடிது அடைப்பர் இவர்என்றான் நீலனை இனிதுநோக்கி நேமியோன் விரையநீநம் பால்வரு சேனைக்கெல்லாம் பாடிவீடமைத்தீ என்னக் கால்மிசை வணங்கிப் போனான் கல்லினால் கடலைக்காட்டி நூல்வரை வழிசெய்தானுக் கந்நிலை நொய்தின் சொன்னான் வில்லினாற் கிருக்கை செய்யும் விரும்பினால் பொருப்பின் வீங்கும் கல்லினால் கல்லைஒக்கக் கடாவினான் கழைகளான நெல்லினால் அளக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் புல்லினால் தொடுத்து வாசப்பூவினால் வேய்ந்துவிட்டான் இற்றிது காலமாக இலங்கையர் வேந்தன்ஏவ ஓற்றர்வந் தளவுநோக்கி குரங்கென உழல்கின்றாரைப் பற்றினன் என்பமன்னோ பண்டுதான் பலநாள் செய்த நற்றவப் பயன்தந்துய்ப்ப முந்துறப் போந்ததம்பி அகனுறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுதகண்ணன் நகம்நிறை கானில்வைகும் நம்மினத்தவரும் அல்லர் தகைநிறை வில்லா உள்ளத்து இராவணன் தந்தஒற்றர் சுகன்இவன் அவனும் சாரன்என்பது தெரியச்சொன்னான் எல்லையில் இலங்கைச் செல்வம் இளையவற் கீந்த தன்மை சொல்லுதிர் மகரவேலைக் கவிக்குல வீரர் தூர்த்துக் கல்லினிற் கடந்தவாறும் கழறுதிர் காலந்தாழ்த்த வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் |