632 மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு எஞ்சுறக் கடித்தெடுத் தெறியவே நளன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்றோர் களைத்தாங்கும் தன்மைபோல் வேரொடும் நெடுங்கிரி தலைவர் வீசின ஓரிடத் தொன்றின்மேல் ஒன்று சென்றுற நீரிடை நிமிர்போறி பிறக்க நீண்டஈது ஆருடை நெருப்புஎன வருணன் அஞ்சினான் சிந்துரத் தடவரை எறியச் சேணிடை முந்துறத் தெறித்தெழு முத்தம் தொத்தலால் அந்தரத் தெழுமுகில் ஆடையா அதன் பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே நீலனிட்ட நெடுவரை நீந்நில மூலம் முட்டலின் மொய்புனல் கைம்மிக கூலம் இட்டிய ஆர்கலி கோத்தலால் ஓலமிட் டெழுந்து ஓடி உலகெலாம் குமுதன் இட்ட குலவரை கூத்தரின் திமிதம் இட்டுத் திரியும் திரைக்கடல் துமிதம் ஆர்புக வானவர் துள்ளினார் அமுதம் இன்னும் எழுவெனும் ஆசையால் ஆர ஆயிர யோசனை ஆழமும் தீர நீண்டு பரந்த திமிங்கிலம் பார மால்வரை ஏறப் பதைத்துடல் பேரவே குன்றும் வேலையுல் பேர்ந்தவால் உற்றதால் அணைஓங்கல் இலங்கையை முற்றமூன்று பகலிடை முற்றலும் பெற்ற ஆர்பு விசும்பு பிளந்ததால் மற்றிவ் வானம் பிறிதொரு வான்கொலோ நாடுகின்ற தென்வேறொன்று நாயகன் தோடு சேர்குழலாள் துயர் நீக்குவான் |