பக்கம் எண் :

631

வானரவீரர்கள் சேதுபந்தனம் பண்ணுதல்

விருத்தம்-15 தரு-14

என்றலும் இரங்கிஐயன் இத்திறம் நிற்கஇந்தப்
பொன்றலில் பகழிக் கப்பால் இலக்கம் என்புகறி என்ன
நன்றென வருணன்தானும் உலகத்து நலிவுதீரக்
குன்றென உயர்ந்த தோளாய் கூறுவல் உன்றுகூறும்

மன்னவ மருகாந்தாரம் என்பதோர் தீவின்வாழ்வார்
அன்னவர் சதகோடிக்கு மேலுளார் அவுணர் ஆயோர்
தின்னவே உலகம்எல்லாம் தீந்தனஎனக்கும் தீயார்
மின்னுமிழ் கணையை வெய்யோர் மேற்செலவிடுதி என்றான்

மொழி உனக்கபயம் என்றாய் ஆதலான் முனிவுதீர்ந்தேன்
பழிஎனக் காகும்என்று பாதகர் பரவைஎன்னும்
குழியினைக் கருதிச்செய்த குமண்டையைக் குறித்துநீங்க
வழியினைத் தருதிஎன்றான் வருணனை நோக்கி வள்ளல்
                     (வருணன் அடைக்கலப்படலம் 14, 15, 19)

கருவரை காதங்கள் கணக்கிலாதன
இருகையில் தோள்களில் சென்னி ஏந்தின
ஒருகடல் அடைக்கமற்று ஒழிந்த வேலைகள்
வருவனவாம் என வந்தவானரம்

பேர்த்தன சிலமலை பேர்க்கப் பேர்க்கநின்று
ஈர்த்தன சிலசில சென்னி ஏந்தின
தூர்த்தன சிலசில தூர்க்கத் தூர்க்கநின்று
ஆர்த்தன சிலசில ஆடிப்பாடின

காலிடை ஒருமலையுருட்டிக் கைகளின்
மேலிடை ஒருமலை வாங்கி விண்தொடும்
சூலுடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய
வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால்

முடுகினன் தருகென மூன்று கோடியர்
எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு
அடுக்கினம் தன்வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான்