791 (விருத்தத்திற் காணும் குகன் பற்றிய நிகழ்ச்சி மிகைப்பாடல் மீட்சிப்படலத்துள் பின்வருமாறு) அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுதினிது அளிப்பஐயன் கருந்தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும் விருந்தினிது அருந்திநின்ற வேலையின் வேலைபோலும் பெருந்தடந் தானையோடும் கிராதர் கோன்பெயர்ந்து வந்தான் (102-72) தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழஓடி அழுதனன் கமலம்அன்ன அடித்தலம் அதனில் வீழ்ந்தான் தழுவினன் எடுத்து மார்பின் தம்பியைத் தழுவுமாபோல் வழுவிலா வலியர் அன்றோ மக்களும் மனையும்என்றான் 102-73 பரதர் ஸ்ரீராமர் திருவடிகளிலே வணங்குதல் விருத்தம்-121 தரு-98 சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பெருமிவிம்மி நாவிடை உரைப்பதொன்றும் உணர்ந்திலன் நின்றநம்பி ஆவியும் உடலும் ஒன்றத்தழுவினன் அழுதுசோர்வான் தழுவினன் நின்றகாலை தத்திவீழ் அருவிசாலும் விழுமலர்க் கண்ணீர்மூரி வெள்ளத்தால் முருகின்செவ்வி வழுவுறப் பின்னிமூசி மாசுண்ட சடையின்மாலை கழுவினன் உச்சிமோந்து கன்றுகாண் கறவையன்னான் (மீட்சிப்படலம் 116, 117) நகரியையும் ஸ்ரீராமரையும் சீதையையும் அலங்கரித்தல் விருத்தம்-122 திபதை-20 அனையதோர் காலத்தம்பொன் சடைமுடியடிய தாகக் கனைகழல் அமரர் கோமாற் கட்டவன் படுத்தகாளை துணைபரி கரிதேர்ஊர்தி என்றிவை பிறவும் தோலின் வினையுறு செருப்புக் கீந்தான் விரைமலர்த் தாளில்வீழ்ந்தான் பின்இணைக் குரிசில்தன்னைப் பெருங்கையால் வாங்கிவீங்கும் தன்இணைத் தோள்களாரத் தழுவிஅத்தம்பி மாருக்கு |