794 தம்பிய ரோடும் தானும்தருமமும் தரணிகாத்தான் அம்பரத் தனந்தர்நீங்கி அயோத்தியில் வந்தவள்ளல் (திருமுடிசூட்டுப்படலம் 20, 21) வாழி விருத்தம்-126 வாழிய சீர்இராமன் வாழியசீதை கோமான் வாழிய கௌசலேசை மணிவயிற்றுதித்த வள்ளல் வாழிய வாலிமார்பும் மராமரம் ஏழும்ராய வாழியகணை ஒன்றேவும் தசரதன் மதலைவாழி மிகைப்பாடல் 21-3 நூற்பயன் விருத்தம்-127 இராவணன்தன்னை வீட்டிஇராமனாய் வந்துதோன்றித் தராதலம் முழுதும்காத்துத் தம்பியும் தானுமாகப் பராபரம் ஆகிநின்ற பண்பினைப் பகருவார்கள் தராபதியாகிப்பின் னும்நமனையும் வெல்லுவாரே மிகைப்பாடல் 21-4 |
|
|
|