பக்கம் எண் :

94

3.   ஆதிகதை அறிவீர்         நீரும்-சகரர்
          அறுபதினாயிரம் பேரும்
     தாதைசொற்படிதங்கள் உயிர்கொடுத்தாரே - முனம்
          தகப்பன்சொற்படிக்குநான் தவஞ்செய்வதோ கடினம் (வன)

4.   ஈன்றவன் சொல் வேதம் தானே-பரசுராமன்
          தாயை வெட்டி னானே
     ஆண்டுபதி னாலும்போய் வருவான் எனக்கண்டோ     
  அரசன்எனைப் போவென்றால் திருவாக்கெதிர்வாக்குண்டோ  (வன)

-0-0-

ஸ்ரீராமர் வனம் ஏகலைப் பற்றி லெட்சுணர் கோபம் கொளல்

விருத்தம்-12

சிந்தையை கௌச லைக்குத் தேற்றிய ராமன் மீண்டு
சுந்தரி சுமித்திரா தேவி துணையடி வணங்கும் போதில்
இந்தமா மகுடம் சாமிக் கீகிறேன் இப்போ தென்ன
அந்தமாம் லட்சும ணன்தான் ஆக்கிரகம் செய்கின் றானே

தரு-7

கௌலிபந்து ராகம்                        ஆதிதாளம்

பல்லவி

     நானே லட்சுமணன்-ஆனால் கொடுக்கிறேன்
     ராமனுக்கு மகுடம்                             (நானே)

அநுபல்லவி

     சேனைபேர் என்னோ டெதிர்க்கட்டும் குதிக்கட்டும்
     சித்திரக் கணையால் வென்று
     அத்தனைப் பேரையும் கொன்று             (நானே)

சரணங்கள்

1. குருடன் ராசமுழி முழிக்கிறாப் போலே பட்டம்
     கொள்ளுமோ பரதற்கு                     (முடிசூட)