பக்கம் எண் :

93

7. பொன்அடி கசங்காதோ-மேனியில்-வன்னமும்சங்காதோ-வெயில்பட்டால்
  என்என்று குதிப்பாயோ-கல்லும்முள்ளும்-என்என்று மிதிப்பாயோ

8. நீசெலும் வனந்தானே-உன்னுட-னேசெல்லுவேன்நானே-என்னிட
  ஆசையெல்லாம் மறந்தேன்-இதுக்கோ-கோசலை பெண்பிறந்தேன்

------

ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி விடைகொளல்

விருத்தம்-11

     தாய்வருந் திடஇவ் வாறு தளருவாள் தன்னை நோக்கிப்
     பாய்வரும் பதினா லாண்டும் பதினாலு நாளே யம்மா
     நீவருந் திடுவ தேனோ நின்கிருபை யாலே கானில்
     போய்வரு வேன்கே ளென்று போற்றுவான் தேற்று வானே

தரு-9

புன்னாகவராளி ராகம்                          ஆதிதாளம்

பல்லவி

     வனம்போய் வருகிறேன் அம்மா - கோசலை அம்மா
     வனம் போய் வருகிறேன் அம்மா                 (வனம்)

சரணங்கள்

1.    வனம்போய் வருகிறேன் நானே - பெற்ற         
        மாதா பிதாவசனம்          தானே
     தனம் தனி மந்திரமும்           அது
          சகல மந்திரமும்           அது
          சத்தியமும்               அது-பர
          முத்தியும்                அது தானே     (வனம்)

2.    கானம் நான் போக             வேணும்-நீர்
          கணவனைக் காப்பாற்றும்    காணும்
     நானிலம் பரதனுக்கு அல்ல என்னப் போமோ
          நானிருந்தரசனைப்
          பொய் சொல்லச் சொல்லல்  ஆமோ       (வனம்)