பக்கம் எண் :

92

3.   ஒருபிள்ளை ராமன்பர லோகசா தகம் செய்ய
     ஒருபிள்ளை பரதனிந்த உலகம் தன்னையாள
     இருபிள்ளை யாலும் கைகை இகபரம் பெற்றாள் என்ன
     வருசொல் உண்டாச்சு தென்ன மாதவம் செய்தேனோ (என்)

-0-0-0-

ஸ்ரீ ராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல்

விருத்தம்-10

     இப்படிச் சிறுதா யாரை இறைஞ்சியே அனுப்பிக் கொண்டு
     மைப்படி வண்ண ராமன் வந்துகோ சலையம் மைக்குத்
     தப்பில்லா தவ்வா றெல்லாம் தான்சொல்லக் கன்றைத் தேடி
     வெப்புறும் பசுப்போல் அன்னை விழுகின்றாள் அழுகின் றாளே.

திபதை-4

முகாரி ராகம்                             ஆதிதாளம்

கண்ணிகள்

1. அய்யைய்யோ ரகுராமா-வனம் போக-தெய்வ சம்மதியாமா-உனைநான்
  எவ்வகை பிறிவேனோ-நான் இனி செய்குவதறிவேனோ

2. என்ஒரு தாயகமே-ரவிகுல-மன்னவர் நாயகமே-அரசன்
  உன்னையும் வெறுத்தானோ-வெறுத்தும்-தன்னுயிர் பொறுத்தானோ

3. சுடர்மணி முடிபோச்சோ-தலைமேல்-சடைமுடி வரலாச்சோ-கேட்க
  உடல்பதறு தேமகனே-மனம்விட-விட உதறுதே மகனே

4. தாய்வரம் அதுகண்டு-பூமியை-காவல் பரதன் கொண்டு-ஆளட்டும்
  நீவனம் போவான்ஏன்-இப்படி-தீவினை ஆவான் ஏன்

5. கலியுகம் மேலிட்டதோ-சூரிய-குலமுறை போய்விட்டதோ-நீஇந்த
  நிலைமை விண்டிடலாமோ-பரதன்-தலைமை கொண்டிடலாமோ

6. எப்படி நான்சகிப்பேன்-உனைப்பிரிந்து எப்படிநிர்வகிப்பேன்-ராவினில்
  எப்படி கண்விழிப்பேன்-உயிர்கொண்டு-எப்படி நான்கழிப்பேன்