பக்கம் எண் :

கடவுள் வணக்கம்1


               செய்தக்காதி நொண்டி நாடகம்1

                         காப்பு

            எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

 
    
கார்கொண்ட கரதலத்தான் வகுதைச் செய்தக்
          காதி2மனு நீதிமன்னன் புகழ்கொண் டாடச்
     சீர்கொண்ட முழுமதுரச் செழுஞ்சொற் பாவாற்
         சிறக்குநொண்டி நாடகத்தைத் தெரிந்து பாட
     நேர்கொண்ட கரிய கொண்டல் கவித்த கோலின்
         நிழல்கொண்ட முத்தொளிவை நீதி வாழ்வை
     ஏர்கொண்ட தோழமைக்கொண் டவனே காப்பன்
         எம்பிரா னெவ்வுயிர்க்குந் தம்பி ரானே.

                   
கடவுள் வணக்கம்

  
     தரு: இராகம் : பூபாளத்தொங்கல்: தாளம்: ஆதி

    
1. திருவு லாவிய வகுதை நகர்oவரு
           கருணை வாருதி தருமகு ணாநிதிச்
       செய்தக் காதியென் றெய்தக் காமனை
           யே..........கொண் டாடிடவே
       உருவ மேயெனி லுருவ மலனல
           வருவ மேயெனில் அருவ மலனெனும்
       ஒருவ னேதுணை ஒருவ னேதுணை
           யே...........எந் நாயகனே.