பக்கம் எண் :

2 செய்தக்காதி நொண்டி நாடகம்

                நபி நாயகம்O வணக்கம்

    2. நகுல னென்கிற சுகில னெண் கொடை
           முகிலெ னுங்கரன் பெரிய தம்பிO
 
     நராதிபன் செய்தக் காதி தன்புக
           ழே...........கொண் டாடிடவே
       முகில்க விந்திடு கவிகை கொண்டருள்
           Oமுகம்ம தென்றிடு நபி*ச ரண்களை
       முழுது மன்பொடு தொழுதி றைஞ்சுவ
            னே...........எந் நாயகனே.

            
     அபூபக்றுO வணக்கம்

      3.காவிற் புதுமலர் வாவிக் கரைகயல்
           தாவிக் குலவிய காயற் றுரை செய்தக்
       காதிக் கினியசொல் லோதித் துதிசெய
           வே...........கொண் டாடிடவே
       பூவிற் றிருமகள் போலத் தருமக
           ளாரை3த் திருநபி நாதர்க் குதவும்
       பூபக் கரையிசை நாவி னிற்புகழ்
           வே...........னெந் நாயகனே.


           
    உமறு கத்தாப்O வணக்கம்

    4. தருவி சயரகு நாத பெரிய
            தம்பிO யையிய லிசைக ளாகவே
       தருசெ ழுந்தமி ழதனி லன்பொடு
            தான்...........கொண் டாடிடவே