பக்கம் எண் :

44 செய்தக்காதி நொண்டி நாடகம்

             சீதக்காதி பேரில் தனிப்பாடல்கள்

          சீதக்காதியைப் படிக்காசுப்புலவர் பாடியவை

     1.நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்
       பூசிக்கு நின்கைப் பொருளொன்று மேமற்றைப் புல்லர்பொருள்
       வேசிக்குஞ் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யுந்
       தாசிக்கு மாகுங்கண் டாய்சீதக் காதி தயாநிதியே.

     2.ஓர்தட்டி லேபொன்னு மோர் தட்டி லேநெல்லு மொக்கவிற்குங்
       கார்தட் டியபஞ்ச காலத்தி லேதங்கள் காரியப்பேர்
       ஆர்தட்டி னுந்தட்டு வாராம லேயன்ன தானத்துக்கு
       மார்தட் டியதுரை மால்சீதக் காதி வரோதயனே.

     3.ஈயாத புல்ல ரிருந்தென்ன போயென்ன எட்டிமரங்
       காயா திருந்தென்ன காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்
       போயா சகமென் றுரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்
       ஓயாம லீபவன் மால்சீதக் காதி யொருவனுமே.

     4.காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே
       தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண் டொலைவில்பன்னூல்
       ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மனுதினமும்
       ஈந்து சிவந்தது மால்சீதக் காதி யிருகரமே.

     5.என்னனைக் கன்று முத்தனை குனிக்கு
         மிறையனை யளைக்குமே யன்று
       மன்னனைக் கன்றிப்பின்னனைக் குதவா
         வன்புளால் வருந்திவா டுவனோ
       முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த
         முதுபகை யவன்பிதா வுறாமற்
       கன்னனைக் கொன்றுவிசயனைப் புரந்த
         கவுத்துவா காயலா திபனே.