பக்கம் எண் :

சீதக்காதிபேரில் தனிப்பாடல்கள்47


    16.கதுங்கிக் கிடக்குமை வேள்சீதக் காதிக்குக் கற்பங்கட்டா
       தொதுங்கிக் கிடக்கும் பரராசர் போலொளிர் கச்சுவிம்மிப்
       பிதுங்கிக் கிடக்கு மலைத்தனத் தாளுயிர் பிச்சித்தின்னப்
       பதுங்கிக் கிடக்குஞ் செழுஞ்சா ளரத்தென்றற் பாய்புலியே.

    17.பத்தாய மீதுங் கடாரங்க டோறும் பணத்தைவைத்துச்
       செத்தா ரவர்நரர் தாமல்ல வேசெய்தக் காதியென்போன்
       உத்தாய மீதுந்தன் கையா லிறைத்தும் ஒருபணமும்
       வைத்தா னிலையென்றும் வைத்தான்றன் கீர்த்தியை மாத்திரமே.

    18.காவொன்று கைத்தலத் தண்ணல்செல் லூரன் கனிந்துநம்மை
       வாவென் றழைத்திட்ட மோதிர மேவண்மை யானதமிழ்ப்
       பாவொன்றும் சற்றும் அறியாத புல்லர்தம் பக்கலிற்போய்த்
       தாவென்று யாதொன்றும் கேட்காம லிட்ட தடையிதுவே.

    19.பண்ணுக் கினிய தமிழ்ப்புல வோர்க்குப்
          பகிர்ந்துபகிர்ந்
       தெண்ணுக்கு ளாகிய பொன்னையெல் லாமள்ளி
          யெண்ணி யெண்ணிக்
       கண்ணுக் கினிய துரைசீதக் காதி
          கடைந்தெடுத்த
       மண்ணுக்கு த்யாகங் கொடுத்தான் சரீரத்தை
          வைத்திருந்தே.
 
   20.காரார் குமணன் கொடையரைக் கால்கன்னன்
          கார்க்கொடைகால்
      மேரான் கொடையரை யேன்கொடுத் தான் வெள்ளை
          நூற்சடையன்
      சீரான மாவலி முக்கான் முழுக்கொடை
          செய்யவென்றே
      பேரான ராசேந்த்ரன் மால்சீதக் காதி
          பிறந்தனனே.