தாய் சோதிடரை நிந்தித்துரைத்தல் 12.மாகத்தத் தும்புக ழான்பகை வேந்தர் மகுடம்பொடி யாகத்தத் தும்பரி யான்சீதக் காதி யணிமலரின் ஏகத்தத் தும்பி யிசைபாடு மார்பனி லென்மகட்கோர் மோகத்தத் துண்டென்று சொன்னா ரிலைமுன் மொழிந்தவரே. பாலனைப் பழித்தல் 13.வேளா மழகன் றுரைசீதக் காதியென் வீட்டிலொரு நாளா கிலும்வரக் காண்கில னேயெந்த நாளுமவன் தோளா லணையுஞ் சுகவாலி பத்தைத் துணிக்கவொரு வாளாய்ப் பிறந்தனை யேமக னேயென்ன வாயுனக்கே. சீதக்காதி பேரில் தாசி பாடியது
14.தினங்கொடுக்குங் கொடையானே1 தென்காயற் பதியானே சீதக் காதி2 இனங்கொடுத்த வுடைமையல்ல3 4தாய்கொடுத்த வுடைமையல்ல எளியா ளாசை மனங்கொடுத்து மிதழ்கொடுத்து மபிமானந் தனைக்கொடுத்தும்6மருவி ரண்டு 7தனங்கொடுத்தும் தேடுதனங் கள்ளர்கையிற் பறிகொடுத்துத் தவிக்கின் றேனே தலைவன் பொருளீட்டற்குக் கப்பலேறிப் போயினானாக, தலைவி அவன் பிரிவாற்றாது வருந்திக்கூறல்
15.தரைகண்ட மட்டும் படர்ந்தண்ட கோளமுந் தாவியெங்கும் உரைகண்ட கீர்த்தி பெறுஞ்சீதக் காதி யுலகினில் வெண்டிரைகண் டெழுங்கடன் மீதேதன் வங்கத்தைச் செல்லவிட்டுக் கரைகண் டவனினங் காணானென் னாசைக் கடற்கரையே. ---------------------------------------------------------------------- 1. கையானே 2. செய்தக்காதி 3. தனமல்ல 4.ஆய்கொடுத்ததனமுமல்ல 5. எளியேனித்தம் 6. வளருங்கும்ப 7.தனங்கொடுத்த உடைமை யெல்லாம் பறி கொடுத்தே இப்படியான |