பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்1


கடவுள் துணை
குசேலோபாக்கியானம்
பாயிரம்
காப்பு
கடவுள் வாழ்த்து
எழுசீரடி ஆசிரிய விருத்தம்
கடலுடைப் புவிவாழ் உயிரெலாங் களிக்கக்
காத்தருள் கண்ணனோ டருநூல்
அடலுறப் பயின்று பின்அவ னருளால்
அருந்திருப் பெறுகுசே லன்றன்
மிடலுடைக் காதை விளம்பிட ஊறு
விரவிடா தளிந்தருள் புரியும்
மடலுடைக் கடுக்கைச் சடைமுடிக் கபோல
மதக்கய மழவிளங் கன்றே.


(சொற்பொருள்.) மடலுடை கடுக்கை சடைமுடி கபோல மத கய மழ இளங்கன்று-
இதழ்களை உடைய கொன்றை மாலையைத் தரித்த சடைமுடியையும் கவுள் மதத்தையு
முடைய (விநாயகக் கடவுளாகிய) மிகவும் இளமையான யானைக் கன்றானது: கடலுடை
புவிவாழ் உயிரெலாம் களிக்க காத்து அருள் கண்ணனோடு-கடலால் சூழப்பட்ட பூமியில்
வாழ்கின்ற உயி்ர்கள் எல்லாம் களிப்படையுமாறு காத்தலைச் செய்து அருளுகின்ற
கண்ணபிரானுடன்; அடல்உற அரு நூல் பயின்று பின் அவன் அருளால் அரு திரு
பெறு குசேலன் தன்-திடமான அரிய நூல்களைக் கற்றுப் பின்னர் அப்பெருமான்
கருணையால் பெறுதற்கு