அரிய பெருஞ் செல்வத்தைப்
பெற்ற குசேல முனிவரது; மிடல் உடை காதை விளம்பிட
ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும்-பெருமையை உடைய வரலாற்றை உரைத்தற்கு
இடையூறு உண்டாகாமல் காத்தருள் செய்யும்.
(விளக்கம்.) ஆசிரியர் தாம் வழிபடு தெய்வ வணக்கம் கூறியது
இது.
யானைக்கு மதநீர் ஊறும் இடம் மூன்றிற் கன்னமும் ஒன்றாதலால் "கபோலமதம்"
என்றார். கபோலம்-கன்னம், கவுள். மூன்றிடமாவன: கன்னம். கை, கோசம்.
என்றும் இளமையாய் இருக்கும் கன்று என்பது தோன்ற "மழவிளங் கன்று"
என்றார். மழ இள இவ்விரண்டும் ஒரு பொருளையே காட்டுஞ் சொற்கள்.
ஒருபொருட்பன்மொழி. அயன் திருமால் அரன் ஆகிய மூவரும் படைத்தல்,
காத்தல், துடைத்தல் ஆகிய முத்தொழிற்கும் உரியவரென்பதும் திருமாலே
கண்ணனாக வந்து பிறந்தார் என்பதும் இலக்கிய மரபாதலால் "காத்தருள்
கண்ணன்" என்றார். குசேலர் கண்ணனோடு ஒருங்கு கல்வி கற்றமையாலும்
அவனாற் போற்றப்பட்டுப் பெருந்திருப் பெற்றமையாலும் அவர் கதை
பெருமையுடையது என்பார் 'மிடலுடைக் காதை' என்றார்.
(1)
குடத்தியர் துகிலைக் கவர்ந்தவன் முனிவர்
கோதையர் மூரல்பண் ணியங்கள்
இடக்களித் துண்டோன் இந்திரன் ஏவ
எழிலிகள் பொழிந்தகல் மழையைத்
தடப்பெருங் கோவர்த் தனங்கரத் தேந்தித்
தடுத்தவன் கமலைவாழ் மார்பன்
வடப்பசுந் தளிரின் இனிதுறை கண்ணன்
மலர்தலை யுலகெலாங் காக்க.
(சொ
- ள்.) குடத்தியர் துகிலை கவர்ந்தவன் - ஆயர் மகளிர் ஆடைகளைக்
கவர்ந்துகொண்டவனும்; முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள் இட களித்து
உண்டோன் - முனிவர்களின் மனைவியர் சோற்றையும் பலகாரங்களையும் அளிக்க
மகிழ்ந்து உண்டவனும்; இந்திரன் ஏவ-தேவர்கோன் ஏவலாலே; எழிலிகள் பொழிந்த
கல்மழையை - மேகங்கள் சொரிந்த கல்மாரியை; தட பெரு கோவர்த்தனம் கரத்து
ஏந்தி தடுத்தவன் - மிகப் பெரிய கோவர்த்தன மலையை கையிலேந்தி (ஆயர்களையும்,
ஆனினங்களையும் காப்பதற்காக )த் தடுத்தவனும் ; கமலைவாழ் மார்பன்-
திருமகளுறைகின்ற திருமார்பை உடையவனும் (ஆகிய) பசுவடம் தளிரின் இனிது
உறை கண்ணன்-பசுமையான ஆலந்
|