தளிரின்மீது இனிதாக அறிதுயில்
செய்து அமர்கின்ற கண்ணபிரான் ; மலர்தலை உலகு
எல்லாம் காக்க-விரிந்த இடத்தை உடைய உலகமெல்லாம் காத்து அருள்க.
(வி - ம்) இக்கவி முதல் பதினொரு பாடல்கள் இக்கதைத் தலைவனாகிய
கண்ணண் துதியென்று காண்க. ஏற்புடைக் கடவுள் என எண்ணி இத்துணைக் கவிகள்
பாடினர் போலும். கண்ணன் மாடு மேய்க்கும்போது ஒருநாள் இடைச் சிறுமியர்
உடைகளைக் கரையிற் களைந்துவைத்துப் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்க
விளையாட்டாக அவற்றைக் கவர்ந்து குருந்தமரத்திலேறி யொளித்தனன். பின் அவர்கள்
வேண்ட அளித்தனன் என்பது. பக்தவிலோசனம் என்ற இடத்தில் யாகஞ் செய்த முனிவர்
'மனைவியர் அளித்த உணவு பலகாரங்களை யுண்டான்' என்பது வரலாறு. அதுகுறித்து,
"மூரல் பண்ணியங்கள்......உண்டோன்" என்றார். கண்ணன் ஒருநாள் இந்திரனுக்குச் செய்யும்
பொங்கல் விழாவைத் தடுத்துக் கோவர்த்தனம் என்ற மலைக்குச் செய்யுமாறு ஆயர்க்குக்
கூறினன் என்றும் அதனாற் சினந்து இந்திரன் மேகங்களை ஏவிக் கல்மழை பொழியும்படி
செய்தனன் என்றும் அதனைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப்
பசுக்களையும் ஆயர்களையும் காத்தனன் என்றும் பாகவதங் கூறும். திருமகளைத் தன்
மார்பி்ல் வாழ்விப்பதும் ஆலிலையில் அறிதுயிலமர்வதும் திருமாலுக்குரிய செயல்.
இங்குக் கண்ணன் செயலும் திருமால் செயலுங் கூறி இருவரும் ஒருவரே என்பது
தோன்ற, கண்ணன் உலகங்காக்க என்றார். என்னையும் அவன் காப்பன் என்பது குறிப்பு.
(2)
வேய்ங்குழல் இசையாம் வலியமந் திரத்தின்
மேன்மைசால் யாதவர் குலத்துப்
பூங்குழல் மடவார் தம்மைத்தன் வசமாப்
புரிந்துவேள் நூற்படி கலவி
ஆங்கவர் பாற்பன் னாளியற் றியசீர்
ஆழியங் கரதலக் கொண்டல்
வாங்குநீர்ப் பரவை யுலகுயிர்க் கென்றும்
வழங்குக திருவொடா யுளுமே.
(சொ-ள்.)
வேய்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் - வேய்ங்குழலின் ஓசையாகிய
வலிய மந்திரத்தினால்; மேன்மைசால் யாதவர் குலத்து பூங்குழல் மடவார் தம்மை-
சிறப்புமிக்க இடையர் குலத்தில் தோன்றிய பூமாலை அணிந்த கூந்தலை உடைய
மங்கையரை ; தன் வசமா புரிந்து ஆங்கு அவர்பால் -
|