தன் வசத்தினராம்படி
மயக்கி அவர்களிடத்தில் ; பல் நாள் வேள் நூல்படி கலவி
இயற்றிய - நெடுநாள் காமநூலின் முறைப்படி கலவி செய்த ; சீர் ஆழி அம் கரதலம்
கொண்டல்-சிறந்த சக்கரப் படையைத் தாங்கிய அழகிய கையை உடைய
மேகவண்ணனாகிய கண்ணபிரான் ; வாங்குநீர் பரவை உலகு உயிர்க்கு என்றும்
திருவொடும் ஆயுளும் வழங்குக-வளைந்த நீர் நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள
உயி்ர்களுக்கு எந்நாளும் பெருஞ்செல்வத்தோடு நீண்ட வாழ்நாளையும் அருள்
செய்வானாக.
(வி - ம்,) மந்திரத்தால் மனிதர்களை மயக்கும் வலிமையுடையோர்
சிலர் உலகில்
வாழ்ந்த வரலாறு இருப்பது கண்டும், நூல் வழக்கிலும் மந்திரம் உண்டு என்பது தெரிந்தும்
ஆசிரியர் வேய்ங்குழ லிசையை மந்திரமாக உருவகஞ் செய்தனர். குழலிசை கேட்டவுடன்
கோபியர் யாவரும் மயங்கிக் காதலுற்று வசமாயினதால் அவ்விசையை "வலிய மந்திரம்"
என்றார். மந்திரத்தாலுஞ் செய்ய வியலாத செயலைச் செய்தது என்பது குறிப்பு. வேள் -
மன்மதன். அவனுக்குரிய நூல் கொக்கோகம். இதனைச் செய்தவர், கொக்கோக
முனிவர். ஆடவர் மகளிர் கூடும் இன்பத்தினை விளக்குவது அந்நூல். உலகுயிர்க்கு
என்பதை உலகத்திற் பகுத்தறிவுடைய மக்களுயிர்க்கு எனப் பொருள் கொள்க.
"கல்வியினூங்கி்ல்லை சிற்றுயிர்க் குற்ற துணை" என்று கூறிய பாடலில் சிற்றுயிர்
என்பது மக்களையே யுணர்த்தியது போலக் கொள்க. வாழ்நாள் இருந்து திருவின்
றெனில் அவன் வாழ்வு சிறப்படையாது. திருவிருந்து வாழ்நாளின் றெனினும் அவ்வாழ்வும்
பயனடையாது. இரண்டும் இருப்பிற் சிறந்த வாழ்வாம் என்ற கருத்தினால் "வழங்குக
திருவொடாயுளுமே" என்றார். (3)
மலர்விழித் தேவ கிக்குநன் மகனாய்
மகிதலத் தவதரித்
ததன்பின்
பலர்புகழ்ந் தேத்தும் நந்தகோ பாலன்
பனிமதி யானன
அசோதை
அலர்மனங் களிப்ப ஆடுறூஉம் பாலன்
ஆகிய ஐயனே நன்னா
வலர்பரா வுறப்பல் வளங்களு முயிர்க்கும்
வழங்கியாண் டருள்செய்வ
னன்றே,
(சொ-ள்.) மலர்விழி தேவகிக்கு நல்மகனாய் மகிதலத்து அவதரித்து
-
நீல மலர்போலும் கண்களை உடைய தேவகிப் பிராட்டிக்கு நல்ல
திருப்புதல்வனாக இப்பூவுலகிற் பிறந்து;
|
|
|
|